Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மணலாற்றில் புதிய களமுனையை திறக்க படையினர் முயற்சி: த நேசன்
Date&Written by: (05.11.2007- Sivamalar)

முல்லைத்தீவில் தமது அடுத்த களமுனையை சிறிலங்காப் படையினர் திறக்கலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.

அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மரணமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மூன்று நாட்களுக்கு துக்கம் அறிவித்துள்ளனர். எனவே விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை வரையிலும் எந்த தாக்குதல்களிலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால் படையினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்படப் போவதில்லை.

வடபகுதியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளை கருதினால் அதில் முகமாலை, நாகர்கோவில் அச்சு, மன்னார், மடு ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒன்றில் பெரும் எடுப்பிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டலாம்.
.
அதேசமயம் மணலாறில் உள்ள ஜனகபுரப் பகுதிக்கு அண்மையில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி மூகாம் மீது வான் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது அந்தப் பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளை பலவீனப்படுத்தும் முயற்சியாகும். எனவே படையினர் முல்லைத்தீவில் தமது அடுத்த களமுனையை திறக்கலாம்.

முல்லைத்தீவு பகுதி மீதான கடுமையான வான் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினரின் 7 ஆவது விஜயபா இலகுகாலால் படை றெஜிமென்ட் கடந்த வியாழக்கிழமை கடும் எறிகணை வீச்சுக்களுடன் முகமாலை முன்னரங்கில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை 7 ஆவது கஜபா றெஜிமென்ட் படையினரும் முகமாலை முன்னரங்கில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் வவுனியா வீதியிலும் படையினர் இரு திசைகளில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். 18 ஆவது கஜபா றெஜிமென்ட் படையினர் ஒரு முனையிலும், 8 ஆவது கஜபா றெஜிமென்ட் படையினர் மறுமுனையிலும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது படையினர் விடத்தல்தீவை கைப்பற்றுவதை தடுக்கும் பொருட்டு விடுதலைப் புலிகள் கடுமையான பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

கட்டுக்கரைக்குளம் பகுதிக்கு வடமேற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன், 12 படையினர் காயமடைந்ததாக அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் ஒரு மேஜர் தர அதிகாரியும், ஒரு குவாடர் மாஸ்டர் தர அதிகாரியும் அடக்கம்.

ஆனால் 25 படையினர் கொல்லப்பட்டதாகவும், தமது தரப்பில் 7 பேர் பலியானதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடாச்சியாக மோதல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் 57 ஆவது படையணி உருவாக்கப்பட்டிருந்தது. அப் படையணியின் கட்டளை தளபதி மாற்றப்பட்ட போதும் அது கடந்த 7 மாதங்களாக மோதல்களில் ஈடுபட்டு வருகின்றது. அதன் கட்டளைத்தளபதியாக பிரிகேடியர் ஜெகத் டயஸ் தற்போது பணியாற்றி வருகின்றார்.

இதனிடையே 58 ஆவது படையணியின் கட்டளை தளபதியான பிரிகேடியர் சார்லி கலகே திடீரென ஏற்பட்ட கடுமையான சுகவீனம் காரணமாக கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது படையினருக்கு தற்காலிக பின்னடைவாகும்.
அவரது இடத்திற்கு பிரிகேடியர் சவெந்திரா சில்வா தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சார்லி கலகே கடந்த படை நடவடிக்கைகளில் கொமொண்டோ பிரிகேட்டை வழி நடத்தியிருந்தார். இவரது வழிநடத்தலிலேயே படையினர் சிறு குழுக்களாக விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் பின்னர் படையினர் வன்னியின் ஓமந்தைக்கு மேற்காக உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். ஆனால் அதில் அவர்கள் வெற்றிபெறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.