Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

அனைத்துலக சமூகங்களின் புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதி தமிழ்ச்செல்வன்: ஜோன் ஹன்சன் பௌவர்
Date&Written by: (04.11.2007- Suganthey)

அனைத்துலக சமூகங்களின் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதியாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் செயற்பட்டார் என்று இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார்.

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நேற்று சனிக்கிழமை (03.11.07) நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் அவர் பேசியதாவது:

சு.ப.தமிழ்ச்செல்வன் இறுதிக் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புன்னகையின் முகமாகி நின்று நோர்வே உள்ளிட்ட அனைத்துலக சமூகங்களின் விடுதலைப் புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதியாக செயற்பட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளாக சமாதானப் பேச்சுக்கள் மூலம் அரசியல் தீர்வினை எட்டுவதற்குரிய முயற்சிகளில் சு.ப.தமிழ்ச்செல்வன் முதன்மையான பங்கு வகித்தவர்.

விடுதலைப் புலிகள் பற்றிய எமது கருத்துருவாக்கம் அவரின் ஊடாகவே வடிவமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளினுடைய அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கருத்து நிலைப்பாடுகள் பற்றிய எமது புரிதலுக்கு அவர் முக்கியவானவராகச் செயற்பட்டார்

தமிழ் மக்களினுடைய நீதியான கோரிக்கைகளை பொறுமையுடன் எடுத்துரைத்தார். அவர் ஒரு மென்மையான, அதேவேளை அறிவார்ந்த ஆளுமைமிக்க ஒரு மனிதன் என்பதை அவருடனான நீண்ட உரையாடல்கள் ஊடாக உணர்ந்து கொண்டேன்.

அவர் எப்பவுமே நேர்த்தியான சொல்லாடல்கள் மூலம் தெளிவான கருத்துக்களை ஆளுமைமிக்க மொழிபெயர்ப்பாளர் ஜோர்ச் மூலம் வெளிப்படுத்தியவர். தனது கருத்துக்களை தோழமையுடனும் அதேவேளை காத்திரமாகவும் வெளிப்படுத்துபவர்.

சிக்கலான சூழ்நிலைகளிலும் உறுதியும் நம்பிக்கையும் கொண்டவராக முன்னேற்றமான தீர்வுகளைக் கண்டறிவதற்குரிய விருப்பும் ஆளுமையும் கொண்டவராகவே அவரைக் கண்டிருக்கின்றேன்.

உரையாடல்களின் போது அவர் ஒருபோதும் சினத்தினை வெளிப்படுத்தியதில்லை. அதேவேளை எனது தரப்பிலிருந்து அதிகளவான எடுத்துரைப்புக்கள் வெளிப்பட்ட போது, தனது விசனத்தை வெளிப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை.

நாங்கள் இருவரும் அவரவர்க்குரிய பணிகளைத் தான் செய்தோம் என்பதையும் அதற்கான அதிகாரத்தினைக் கொண்டிருந்தோம் என்பதையும் இருவருமே அறிந்திருந்தோம்.

ஒரு பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக தமிழ்ச்செல்வன் நல்லெண்ண விட்டுக்கொடுப்பிற்குரிய விருப்பினை வெளிப்படுத்தி வந்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் மென்போக்குச் சக்தியாகவும் அரசியல் தீர்வுக்கான தீவிர முனைப்போடு உழைத்தவராகவும் நான் அவரைப் பார்க்கின்றேன்.

அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய இடைவெளியை நிரப்புவதற்குரிய வகையில் தமிழ்ச்செல்வன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கினார்.

கடந்த ஒரு ஆண்டுக்குள் சமாதான முயற்சிகள் சார்ந்து அதியுச்ச பங்கு வகித்த அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் இழந்துள்ளோம். இருவரினதும் இழப்பு பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினருக்கும், தமிழ் மக்களினதும் துயரத்தில் தாம் பங்கெடுப்பதாக தெரிவித்த ஹன்சன் பௌவர், இலங்கைத்தீவின் இன்றைய நெருக்கடி நிலையில் தமிழ்ச்செல்வனின் இழப்பு பேரிழப்பாகும், சமாதானப் பாதையில் அவர் விட்டுச்சென்றுள்ள பணிகளை முன்னெடுப்பதே அவருக்கு நாமெல்லோரும் அளிக்கக்கூடிய மதிப்பாக அமையும் என்றார் அவர்.

இந்நிகழ்வு அன்னை பூபதி கலைக்கூட மண்டபத்தில் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெற்றது.

பல நூற்றுக்கணக்கான தமிழீழ மக்கள் கனத்த நெஞ்சங்களோடு திரண்டு வந்து சுடர்-மலர் வணக்கம் செலுத்தினர்.

இலங்கைக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர், நோர்வே வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த தோமஸ் ஸ்தங்கலாண்ட் மற்றும் நோர்வேஜியப் பிரதிநிதிகளும் வீரவணக்க நிகழ்வில் பங்கேற்றனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய 5 மாவீரர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் சுரேஸ் சிவராஜா ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.

சமாதான சிறப்புத்தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர், ஒஸ்லோ பல்கலைக் கழகப் பேராசிரியரும் ஆய்வாளரமான கிறிஸ்தியான் ஸ்தொக்க, Red Allaince கட்சியைச் சேர்ந்தவரும் ஒஸ்லோ நகரசபை உறுப்பினருமான ஆர்லிங் பொல்க்கவோல்ட் ஆகிய நோர்வேஜியப் பிரதிநிதிகள் நினைவுரைகளை ஆற்றினர்.

கலாநிதி சிதம்பரநாதன் கந்தசாமி, வடக்கு - கிழக்கு மனித உரிமை மையத்தின் துணைத் தலைவரும் சட்டவாளருமான சிவபாலன், தமிழ் அமைப்புக்களின் ஒன்றிய இணைப்பாளர் யோகராஜா பாலசிங்கம், தமிழ் மகளிர் அமைப்பு பொறுப்பாளர் வசந்தி பிரான்சிஸ், தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதி சங்கீதா சிவஞானம் ஆகியோர் வீரணக்க உரை ஆற்றினர்.

சமாதான முயற்சியில் முக்கிய பங்கு வகித்த நோர்வே வெறுமனே கவலை தெரிவிப்பது மட்டும் போதுமானதல்ல என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீதான சிறிலங்கா பயங்கரவாத அரசின் படுகொலை நடவடிக்கையை நோர்வேயும் அனைத்துலக நாடுகளும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். சமாதானத்திற்காக பாடுபட்ட தமிழ்ச்செல்வனின் வீரச்சாவுடன் நீதியான சமாதானத்திற்கான அனைத்துக் கதவுகளும் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. எனவே தமிழ் மக்களின் தன்னாட்சிக்கான போராட்டத்தினை நோர்வேயும், அனைத்துலகமும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தமிழீழ மக்களின் விடுதலை, கெளரவமான, பாதுகாப்பான வாழ்வு என்ற உன்னத இலட்சியங்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து வீச்சுடன் செயற்பட்டு, அதியுச்சக் கொடையாகத் தனது உயிரையே பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அர்ப்பணித்துள்ளார். வாழும் போதும் வரலாறு படைத்து வீரச்சாவின் பின்பும் வரலாறாய் எமக்கு வழிகாட்டியாகி நிற்கும் தமிழ்ச்செல்வன் என்ற விடுதலை நெருப்பின் கனவு நனவாக நோர்வே வாழ் தமிழீழ மக்கள் மூச்சாக விடுதலைப்பணிகளுக்காக உழைப்போம் என்ற உறுதியெடுத்தலுடன் வீரவணக்க ஒன்றுகூடல் நிறைவுபெற்றது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.