Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

குருத்தோலையாக வளர்ந்த மாவீரன் கொல்லப்பட்டமைக்கு கண்ணீர் சிந்தும் உரிமை கலைஞருக்கு இல்லையா?: கி.வீரமணி
Date&Written by: (04.11.2007- Ramani)

தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாயமாக குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே, அவனுடைய தளபதிகளோடு என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்குக்கூட தமிழக முதல்வர் கலைஞருக்கு உரிமை இல்லையா? என்று திராவிடர் கழகத் தலைவர் (தமிழ்நாடு) கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஜீவமரணப் போராட்டமாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் அவர்களும் அவருடைய முக்கியத் தளபதிகள் அய்வரும், இலங்கை இராணுவத்தால் வான் வழித் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதைக் கண்டு உலகமே கண்ணீர் வடித்து கதறிப் புலம்பி தனது மனிதாபிமானத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழினத் தலைவரும், காவலரும் தமிழ்நாடு முதல் அமைச்சருமான மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள், அவர் விடுத்த இரங்கலை, கண்ணீர்க் கவிதைப் பூக்களாக்கி சோகக் கடலில் உள்ள தமிழினத்தின் ஒட்டு மொத்த உணர்வினைத் தெரிவித்துக் கொண்டார்!

அவர் மட்டும் அல்ல- மனித இதயம் படைத்த அத்துணை பேரும் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, இதற்காக முதல்வரைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்- புலிகளுக்கும் இவருக்கும் இரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றெல்லாம் பிதற்றியுள்ளார்!

மனிதநேயம் படைத்த அத்துணை பேரது ஒட்டு மொத்தக் கண்டனத்திற்குரியதாக, அந்த அம்மையாரின் அறிக்கை அமைந்துள்ளது!

தடை செய்யப்பட்ட இயக்கத்தினைச் சார்ந்தவருக்கு, இரங்கல் தெரிவிப்பது கூடாதாம்!

உலக நாடுகளே அவரை அழைத்துத்தானே பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதை இவர் மறுக்க முடியுமா?

என்னே விசித்திரம்.

கலைஞர் ஒரு பச்சைத் தமிழர் அவர்தம் உணர்வுகளும் குருதியோட்டமும் தமிழ் இனத்தின் இயல்பான சொத்துக்கள்.

மனித நேயத்தோடு மட்டுமல்ல, தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாயமாக குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே, அவனுடைய தளபதிகளோடு என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்குக்கூட அவருக்கு உரிமை இல்லையா?

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதற்கொப்ப மனத்தாலும் இனத்தாலும் ஒன்றுபட்டவர் என்பதால் உடனடியாக இப்படி எழுதி தனது துயரத்தினை வெளியே கொட்டி ஆறுதலைத் தேடினார். ஆனால் ஜெயலலிதாவுக்கு மனமும் வேறு அவர்தம் இனமும் வேறு. பரம்பரை யுத்தத்தினை இதிலும்கூடத் தொடர்ந்து, தனது அற்பத்தனத்தைக் காட்டியுள்ளார்!

எதிரியாக இருந்தாலும்கூட, இறந்தவர் என்றால் அனுதாபம் தெரிவிப்பது சராசரி மனிதாபி மானம். இதுகூட இல்லை என்பதோடு இதனைக் கண்டித்து அறிக்கை விடும் அளவுக்குச் சென்றால், தமிழினத்தின் பகைவர்களை இதன் மூலம் அடையாளம் காண ஒரு சரியான சந்தர்ப்பம் இது என்றுதான் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு இரங்கல் தெரிவித்தமைக்காக கலைஞருக்குப் புலிகளுடன் தொடர்பு என்று அறிக்கை விடும் அம்மையாருடன் கூட்டணியில் இருக்கும் சகோதரர் வைகோவின் நிலைப்பாடுபற்றி கவலைப்பட்டு அறிக்கை கொடுப்பாரா?

அவரும் தானே இரங்கல் செய்தி விடுத்தார். அவரின் புலிகள் ஆதரவுக்காகத்தானே பொடா சட்டத்தை அம்மையார் பாய்ச்சினார்?

சகோதரர் வைகோ. அவர்களே, இதற்குப் பிறகும்கூட சேரக்கூடாத இனத்தோடு சேர்ந்த நீங்கள் ஏதோ ஒரு சில சீட்டுக்களுக்காக இப்படிப்பட்டவர்களோடு கூட்டணியில் தொடர்வது எவ்வகையில் நியாயம்? உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் உரிமையுள்ள கேள்வி இது! ஆத்திரப்படாமல் யோசியுங்கள்! என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.