Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல, செய‌ல்க‌ளினா‌ல் கொடுப்போம்: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்
Date&Written by: (04.11.2007- Sankiliyan)

விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலைக்குத் தகுந்த பதிலடி விரைவில் கொடுக்கப்படுமென விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதனை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பி.பி.சி. செய்திச்சேவைக்குக் கூறியுள்ளார்.

தமிழ்ச்செல்வனின் படுகொலைக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும். அதை வார்த்தைகளால் கூறமாட்டோம் செய்கையால் செய்து காண்பிப்போம் என இளந்திரையன் கூறியிருப்பதாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

தமது நடவடிக்கை மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடியவகையில் அமைந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். எனினும், எவ்வாறான பதில் நடவடிக்கைகளைத் தாம் மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பதை இளந்திரையன் கூற மறுத்துவிட்டார் என பி.பி.சி. செய்திச்சேவை கூறியுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.