Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

எதிர்விளைவுகள் குறித்து எரிக் சொல்ஹெய்ம் கவலை
Date&Written by: (03.11.2007- Nitheya)

இலங்கையின் தற்போதைய நிலைமைகளின் எதிர்விளைவுகள் குறித்து நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கவலை தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்தது குறித்து நோர்வேயின் என்.ரி.பி. செய்தி நிறுவனத்துக்கு எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ள கருத்து:

அமைதி முயற்சிகளில் நாம் அனுசரணையாளராக செயற்பட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்துக்கும் இடையேயான முக்கிய தொடர்பு மையமாக தமிழ்ச்செல்வன் விளங்கினார். இலங்கையின் தற்போதைய போர் நிலைமைகளின் விளைவுகள் தொடர்பாக ஆழ்ந்த கவலை கொள்கிறோம் என்றார் எரிக் சொல்ஹெய்ம்.

இலங்கை அமைதி முயற்சிகளுக்கு முன்னர் பொறுப்பாக சிறப்புத் தூதுவர் விதார் ஹெல்கிசன் கருத்து தெரிவிக்கையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவும் அமைதிப் பேச்சுக்களில் முக்கிய பங்கும் வகித்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் என்று கூறியுள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.