Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தூய விதைகுழியில் ஐந்து மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டன
Date&Written by: (03.11.2007- Punitha)

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் வீரச்சாவடைந்த லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகிய ஐந்து மாவீரர்களின் வித்துடல்கள் இன்று முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டன.

முன்னதாக ஐந்து மாவீரர்களின் வித்துடல்கள் மாவீரர்களின் இல்லங்களில் இருந்து முழுப்படைய மரியாதையுடன்
கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன.

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் கிளிநொச்சி வட்டப் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பொது ஈகைச்சுடரை வவுனியா மாவட்ட கட்டளைத்தளபதி வேலவன் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் வித்துடல்களுக்கு மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தினர்.

மாவீரர்களின் வித்துடல்களுக்கு விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பால்ராஜ், படையத் தொடக்கப் பயிற்சிப் பள்ளிகளின் சிறப்புத்தளபதி கேணல் ஆதவன், வவுனியா மாவட்ட கட்டளைத்தளபதி வேலவன், கட்டளைத்தளபதி ரமேஸ், கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன், விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்தனர்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப்பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.

அதன் பின்னர் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஐந்து மாவீரர்களின் வித்துடல்கள் பிற்பகல் 2:00 மணிக்கு முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டன.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.