Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கிறது: கி.வீரமணி
Date&Written by: (03.11.2007- Ramani)

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவு செய்தியானது உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் விடுதலைப் போராட்டமாகி முகிழ்த்துக் கிளம்பி மும்முரமாய் நடந்து வரும் இக்காலகட்டத்தில், நேற்று ஈழத்திலிருந்து வந்த செய்தி, உலகத் தமிழர்களின் உள்ளங்களை வெந்தணலில் தள்ளி வாட்டி வதைக்கும் துன்பச் செய்தியாகும்.

வான் வழித் தாக்குதல் காரணமாக, பிரிகேடியர் தமிழ்ச்செல்வனும், லெப்டினன்ட் கர்னல் அன்புமணி (எ) அலெக்ஸ், மேஜர் முகுந்தன், கேப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், வாகைக்குமரன் ஆகிய தளபதிகளும் கொல்லப்பட்டனர் என்ற செய்தி தமிழர்களை மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் செய்தியாகும்!

அரசியல் மேதை ஆன்டன் பாலசிங்கம் மறைந்த நிலையில், அவ்விடத்தைப் பெரும் அளவில் நிரப்பி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக்குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்து பேச்சுவார்த்தை களைத் திறம்பட நடத்திய நாயகருமான மானமிகு தமிழ்ச்செல்வன் மறைவு ஒரு பேரிடி போன்ற செய்தி!

முன்பு ஒரு முக்கிய கட்டத்தில் தளபதி கிட்டுவையும், மற்ற முன்னணியினரையும் இழந்த கொடுமைக்கு இயற்கை அவர்களை ஆளாக்கியது.

அதன்பிறகு ஆன்டன் பாலசிங்கம், அதன்பிறகு இப்படி ஒரு ஈடுசெய்ய இயலாத இழப்பினால் ஏற்பட்டுள்ள சோகம்!
அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் எய்தியது லட்சியப் போரில், விடுதலைப் போரில்- வீரமரணங்கள்! அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்!

அவ்வியக்கத்திற்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும், ஈழத் தமிழர் பெருங்குடும்பத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போர் முனையில் இதுபோன்ற அதிர்ச்சிகள் வந்தாலும், லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் பயணத்தினை தொய்வின்றி தொடர்ந்து, எதற்காக அம் மாவீரர்கள் தங்களை விதைத்துக் கொண்டார்களோ, அவர்தம் லட்சியத்தினை செயலுருவில் காண உலகத் தமிழர்கள் ஆதரவு காட்டும் உணர்வுகளாக அனுதாபங்களை மாற்றுவார்களாக என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.