Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தம்பி தமிழ்ச்செல்வா! உன்னை எரிக்கவில்லை...ஏற்றியிருக்கிறோம்: பாரதிராஜா
Date&Written by: (03.11.2007- Ramani)

தம்பி தமிழ்ச்செல்வா! உன்னை எரிக்கவில்லை...ஏற்றியிருக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாட்டிலிருந்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.
அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒரு விடிவெள்ளியைக் கொன்று புலர்ந்த இந்த வெள்ளி விடியாமலே இருந்திருக்கலாம்

ஒரு அட்சயப் பாத்திரத்தை பிச்சைக்காரர்கள் தின்று தீர்க்க இந்த நாள் விழிக்காமலே இருந்திருக்கலாம்.

மரணத்தைக் கண்டு அஞ்சியதில்லை தம்பிகள்! அதுதான் அவர்களுக்கு முகவரி

வலிகளும் அவர்களுக்கு புதிதல்ல! அவர்களின் இரணங்கள்- சாதாரணம்! தழும்புகளை நெஞ்சில் சுமந்த வீர மறவர்கள்!

என்றாலும் அவர்கள் கண்ணீரில் நனையும்போது இங்கே கரிக்கிறது- அங்கே அவர்கள் காயப்படும்போது இங்கே குருதி கொதிக்கிறது

வான்வழியே விழுந்தது வெடி அல்ல- எங்கள் நெஞ்சில் விழுந்த இடி!!

தம்பி தமிழ்ச்செல்வா! நீ மாபெரும் இயக்கத்தின் அரசியல் வழிகாட்டி மட்டுமல்ல

தம்பி பிரபாகரனைக் காண வீரமண்ணிற்கு எமை அழைத்துச் சென்று விருந்தோம்பி உபசரித்து மறத் தமிழ் மக்களின் மற்றோர் உலகை எனக்குக் காட்டியவனும் நீ தான்!

அதனால்தான் அன்றே என் அரசியல் காவியத்திற்கு உன் பெயரிட்டேனோ?

ஈழத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை, சமாதானப் பாதை நோக்கிய பயணத்தை உலகெங்கிலும் உள்ள அரசியல் அரங்குகளில் ஓங்கி ஒலிக்கச் செய்த தம்பியே! உமது இழப்பு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது- உலக உருண்டையின் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் தமிழர்கள் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அந்தோ!

அன்று சிங்கத்தை இழந்தோம்!

இன்று தங்கத்தை இழந்துவிட்டோம்!!

அகிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனைக் கொன்ற கைகள்தான் இன்று உன்னையும் தின்றது!

திலீபன் இறந்தபோது அவன் தாய் கூறினாள்- "திலீபனைப் புதைக்கவில்லை..விதைத்திருக்கிறோம்"

தம்பி தமிழ்ச்செல்வா "உன்னை எரிக்கவில்லை...ஏற்றியிருக்கிறோம்" என்று பாரதிராஜா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.