Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மக்களின் உரிமைப் போராட்டத்தில் உயிர் தந்த தமிழ்ச்செல்வன்: இந்திய கம்யூனிஸ்ட்
Date&Written by: (03.11.2007- Ramani)

மக்களின் உரிமைப் போராட்டத்தில் உயிர் தந்தவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை வாழ் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வந்தவர் தமிழ்ச்செல்வன். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதிலும் பங்கெடுத்தவர். நாற்பது வயது நிரம்பாத போராளி கொல்லப்பட்ட செய்தி வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆயுத பலத்தைக் கொண்டு போர் நடத்தி இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்பது, இலங்கை வாழ் தமிழ் மக்களைக் கொன்று அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போர் முறையைக் கைவிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். மக்களின் உரிமைப் போராட்டத்தில் உயிர் தந்த தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.