Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு: அனைத்துலக ஊடகங்கள் இரங்கல்
Date&Written by: (03.11.2007- Sivamalar)

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவுக்கு பல்வேறு அனைத்துலக ஊடகங்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளன.

அவற்றில் சில:

அனைத்துலக செய்தி நிறுவனமான "ரொய்ட்டர்ஸ்" வெளியிட்டுள்ள "இரங்கல்" செய்தி:
எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் கவரக்கூடிய வகையிலான உடைகளை உடுத்தியவராக இலங்கை தமிழ்ப் புலிகளுக்கும் வெளி உலகத்துக்கும் பிரதான தொடர்பாளராக இருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் "பொதுமக்களுக்கான" முகமாக சு.ப.தமிழ்ச்செல்வன் இயங்கினார். தமது வான்குண்டுத் தாக்குதலினால்தான் சு.ப.தமிழ்ச்செல்வன் இறந்ததாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை மிகவும் கடினமானதொரு நிலைக்கு- உள்நாட்டு யுத்தத்தை இக்கட்டான நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கருதுகின்றனர்.

2006 ஆம் ஆண்டு ரொய்ட்டர்ஸ்க்கு தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல் ஒன்றில், "ஒரு 16 வயதுச் சிறுவனை இராணுவம் படுகொலை செய்கின்றபோது அவனது சகோதரனிடம் போய்...உனக்கு 18 வயது ஆகவில்லை என்பதால் வன்முறைப் பாதைக்குப் போகாதே என்று சொல்ல முடியாது" என்று கூறியதாகப் பதிவு செய்து தனது இரங்கல் செய்தியை ரொய்ட்டர்ஸ் நிறைவு செய்திருக்கிறது.

பி.பி.சி.யின் இரங்கல் செய்தி:
ஒரு கொடூரமான இராணுவ மனிதராக எதிரிகள் அவரைக் கூறுகின்றபோது எப்போதுமே புன்னகை பூத்தவராக நட்புறவுடன் பழகக் கூடியவர் அவர். ஒரு தலைசிறந்த கெரில்லாப் போராளியைப் போல் அவரது உடை இருந்தது இல்லை. ஒரு நிர்வாக அதிகாரியைப் போல் உடை உடுத்தி பேச்சு மேசைகளில் அவர் பங்கேற்றிருந்தார். தமிழீழம் ஒருநாள் மலரும் என்ற அந்தக் கனவுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தவர்.

2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆழிப்பேரலை ஏற்பட்ட பின்னர் பி.பி.சி.யின் தமிழ்ச் சேவையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை விபரித்தார். போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் புனர்வாழ்வுப் பணிகளை அவர் பார்வையிட்டார். அவரது நடவடிக்கைகளால் பல தரப்பும் அவரை புகழ்ந்தன. தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண பிரதேசத்தின் தளபதியாகவும் அவர் பணிபுரிந்துள்ளார். 1993 ஆம் ஆண்டு போர்க்களத்தில் காயமடைந்த பின்னர் அரசியல் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு இராணுவ இயக்கமாக அறியப்பட்டு மெதுவாகத்தான் அரசியலுக்குள் நுழைந்து கொண்டிருந்தமையால் அது பாரிய சவாலான பணி. அதனை ஏற்றுக் கொண்டு 1994-95 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துடனான நேரடிப் பேச்சுக்களுக்கு தலைமை வகித்தார். அனைத்துலக ஊடகங்களை எப்படிக் கையாள்வது என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஜின்குவ (சீனா)
சு.ப.தமிழ்ச்செல்வனின் மரணமானது சிறிலங்காவின் பெரும்பான்மைச் சிங்களவர்கள் கொண்டாடக் கூடிய ஒன்றாக இருப்பினும் இலங்கையின் அமைதி முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்குப் பதிலடியாக புலிகள் நடவடிக்கை மேற்கொண்டால் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மிகவும் கடினமானதாகிவிடும்.

கார்டியன் (பிரித்தானியா)
சிறிலங்கா வான்குண்டுத் தாக்குதலில் தமிழ்ப் புலிகளின் அரசியல்துறை தலைவர் மற்றும் அமைதிப் பேச்சுக் குழுவின் தலைவரின் இறந்தமையானது இரத்தக்களறியான ஒரு முழு அளவிலான யுத்தத்துக்கு அந்தத் தீவு திரும்பப்போகிறது என்பதை உறுதி செய்துள்ளது. 43 வயது சு.ப.தமிழ்ச்செல்வன், புத்திச்சாலியான புலிகளின் வெளி உலகும் ஆவார். தமிழ்ச்செல்வன் ஒரு முக்கிய நபராவார். அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகியன புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவித்தாலும் கூட, இலங்கையின் வடக்கு காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போராளிகளின் "சமாதான செயலகத்தில்" இராஜதந்திர உறவுகளை அரங்கேற்றியவர் அவர். வீரராகவும் அதே சமயத்தில் நற்சிந்தனையாளரான தமிழ்ச்செல்வன், போர்க்களத்தில் இரண்டு முறை காயமடைந்தவர். ஊடக மாநாடுகளுக்கு ஊன்றுகோல் உதவியுடன் வருவார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை ஒவ்வொருவராக அழிப்போம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். இலங்கை மூழ்கப் போகிறது என்பதை கோடிட்டுக்காட்டுவதாக இத்தகைய பேச்சுக்கள் உள்ளன. அயர்லாந்தை விட பெரியதானதாக இல்லாதிருக்கும் அந்த கண்ணீர் துளி வடிவிலான தேசம் போரினால்- மனித உரிமை மீறல்களால்- சித்திரவதைகளால்- கடத்தல்களால்- நீதிக்குப் புறம்பான படுகொலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போது புலிகளின் கையில் "பந்து" மீண்டும் சிக்கியுள்ளது. தமது நிலைப்பாட்டை இந்த மாதத்தின் பிற்பகுதியில் மாவீரர் நாள் உரையின்போது பிரபாகரன் வெளிப்படுத்துவார். எதிர்வரும் சில வாரங்களுக்கு புலிகளின் பேரிழப்புகளை ஏற்படுத்தும் எதிர்வினைக்கு சிறிலங்கா முகம் கொடுக்கும்.

வொய்ஸ் ஓஃப் அமெரிக்கா:
இத்தகையதொரு மூத்த தலைவரின் இழப்பை புலிகள் இலகுவானதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

என்.டி.டி.வி. தொலைக்காட்சி (இந்தியா):
வெளிஉலகுடனான புலிகளின் தலைமைப்பீடத் தொடர்பாளராக இருந்தவர் தமிழ்ச்செல்வன். நாளாந்தம் சமாதான தூதுவர்கள், இராஜதந்திரிகள், மனிதாபிமான பணியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தவர். சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட சில அனைத்துலக ஊடகவியலாளர்களுக்கு நேர்காணல் அளித்தவர். ஜெனீவா பேச்சுக்களுக்கு தலைமை வகித்தவர். புலிகளின் படையணியின் உயரிய தரமான பிரிகேடியர் தரத்தைப் பெற்றுள்ளார்.

பெல்பாஸ்ட் டெலிகிராப்:
தமிழ்ப் புலி போராளிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரை சிறிலங்கா இராணுவம் வான்குண்டுத் தாக்குதலின் மூலம் "படுகொலை" செய்துள்ளது.
Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.