Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தமிழீழ வரலாற்றின் தொடக்கம் இது என்பதை உலகம் அறியும் நாள் தொலைவில் இல்லை: தமிழ் ஊடக அறிவியற் கல்லூரி
Date&Written by: (03.11.2007- Punitha)

சர்வதேசமெங்கும் பறந்து பறந்து சமாதான கீதம் பாடித்திரிந்த தமிழீழ வெண்புறா பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைப் பலி கொண்டது எதிரிக்கு புகழ் சேர்க்கலாம். ஆனால் ஒரு புதிய எழுச்சிமிகு தமிழீழ வரலாற்றின் தொடக்கம் என்பதை உலகம் அறியும் நாள் தொலைவில் இல்லை என்று தமிழீழத்தின் தமிழ் ஊடக அறிவியற் கல்லூரி தெரிவித்துள்ளது.

தமிழீழத்தின் தமிழ் ஊடக அறிவியற் கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தாயகக் கனவுடனும் விடுதலை உணர்வுடனும் களத்திலும், தளத்திலும் தேசியத் தலைவரின் பணிகளை ஏற்று ஒளிரும் கண்களுடனும் மலரும் புன்னகையுடனும் இடையறாது உழைத்த அந்த அற்புதமான போராளி இதயம் இன்னும் தணியாத தாகத்துடன் ஓய்வு கொண்டுவிட்டது.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் எமை விட்டுப் பிரிந்துவிட்டார்...

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் எவருமே எதிர்பார்த்திராத எல்லோரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு இழப்புத் துயர் நிகழ்ந்தேகிவிட்டது.

பௌத்த சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாத அராஜகத்திற்கு சர்வதேசமெங்கும் பறந்து பறந்து சமாதான கீதம் பாடித்திரிந்த தமிழீழ வெண்புறா பலியாகிவிட்டது.

இதுவொரு அரசியல் மதியூகியின் விடுதலைப் போராளியின் தமிழீழ மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்த மனிதனின் மரணம் மட்டுமல்ல. தமிழீழத் தேசியத் தலைவனின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் வழிகாட்டலுக்கும் பாத்திரமான ஒரு பல்துறை ஆற்றல் மிகு தானைத் தளபதிகளுள் ஒருவரின் மரணம் என்பது தான் இதயத்தில் நிரந்தர வலியை ஏற்படுத்தியுள்ளதாகும்.

எதிரி இதனை தனக்குப் புகழ் சேர்க்கும் முடிவாகக் கருதலாம். ஆனால் இது ஒரு புதிய எழுச்சி மிகு தமிழீழ வரலாற்றின் தொடக்கம் என்பதை உலகம் அறிந்து கொள்ளும் நாள் தொலைவில் இல்லை.

தமிழ்ச்செல்வன் ஒரு விடுதலை விருட்சத்தின் வீரியம் மிக்கவை. தான் போராட்டத்தினைக் கற்றதை விடவும் போராட்டம் தனக்குக் கற்றுத் தந்தவை மிக அதிகம் என ஆத்மார்த்தமாய் உணர்ந்திருந்தவர் அவர். தனது வயதில் பாதியிலும் அதிகமான காலம் ஈழ விடுதலைப் போரோடு தன்னை இணைத்துக் கொண்டு போராட்டத்தையே வாழ்வாக்கி விடுதலை வேட்கையுடன் களமாடிய அனுபவம் மிக்கவர். அதனாலேயே சமாதான தளத்திலும் எதிரிகளுடன் அரசியல் சமராட அவரால் முடிந்தது.

அதுவே அவரது பலம்.

அந்த ஆளுமையே எதிரிக்கு அச்சமூட்டும் அனுபவம் ஆகியது.

அத்தகைய திறன் மிகு விறல் வேங்கை இன்று மௌனம் ஆகிவிட்டது.

மூன்று தசாப்தத்திற்கும் அதிகமாக முடிவிலியாய்த் தொடரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச பேச்சுவார்த்தை அரங்குகளில் "தேசத்தின் குரலோடு" ஒரே குரலாய், உரிமைக் குரலாய் ஓங்கி ஒலித்து சமாதானம் பேசிய குரல் ஓய்ந்து விட்டது.

திசைக்கொன்றாய் பறந்து புகலிடம் தேடிய நாடுகளை கூடுகளாக்கிக் கொண்ட தாயகப் பறவைகளை எல்லாம் தேசம் தோறும் திரிந்து ஒருங்கிணைத்து அவற்றின் இதயம் எங்கும் தமிழீழக் கனவினை விதைத்த உழைப்பு தமிழ்ச்செல்வனின் ஆற்றலுக்கு வரலாற்று ஆதாரமாகும்.

தெளிந்த சிந்தனை தீர ஆலோசித்து முடிவெடுக்கும் திறன் தீர்க்கமான பேச்சு அரசியலும், அறிவியலும் கலந்த அணுகுமுறைகள் அரசியல்த்துறைப் பொறுப்பாளருக்கான தலைவரின் தெரிவை நியாயப்படுத்தி நிற்கும்.

புயலுக்கு நடுவிலும் புன்னகைத்து நிதானம் காத்து செயற்படும் தற்துணிவிற்கு தமிழ்ச்செல்வன் அவர்கள் ஓர் உறுதியான அடையாளம்.

அந்த அடையாளம் அமைதியாக தன்னைத் தமிழர் நெஞ்சங்களில் ஆழப்பதித்து அடங்விட்டது.

வரலாற்றின் அத்தியாயங்கள் எல்லோருக்கும் வரிகளை ஒதுக்கிவிடவில்லை. ஆனால் வராற்றின் சில பக்கங்களை சிலர் நிரந்தரமாகவே தமது செயற்பாடுகளால் உரிமையாக்கிவிடுவதுமுண்டு. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் வரலாறு சில உன்னதங்களை மண்ணிலேயே நிரந்தரமாக ஏனை மானுட ஆத்மாக்களுடன் உயிர்ப்புக் கொள்ள வைத்து விடுகிறது.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்; அத்தகைய உன்னதங்களை உள்ளடக்கியவர்களில் ஒருவர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவரது அத்தியாயம் முடிந்து விட்டாலும் வரலாறு தொடரவே போகிறது. அவரது சகாக்களும் தமிழீழ மக்களும் தேசியக் கனல் ஒளிர அதனை விடியல் முடிவை நோக்கி முன்னெடுப்பார்கள் என்பது உறுதி.

அந்த முன்னெடுப்புக்களின் போது பிரிகேடியர் சு.ப.தமிழ்;ச்செல்வன் அவர்களின் உயிர்த்தெழுகையானது ஆயிரம் - பல்லாயிரம் போராளிகள் உள்ளும் மக்களின் உள்ளும் நிகழப்போவது உறுதி.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுக்கும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டு லெப்.கேணல் அன்புமணி, மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகியோருக்கும் எமது வீர வணக்கங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.