Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சமாதான முயற்சிகளை படுகொலை செய்வதற்கு ஒப்பாகும்: த.தே.கூ. கண்டனம்.
Date&Written by: (03.10.2007- Devi)

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனைப் படுகொலை செய்வது என்பது சமாதான முயற்சிகளையும் படுகொலை செய்வதற்கு ஒப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராசா, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டாக இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான சு.ப.தமிழ்ச்செல்வன், தனது விடுதலைப் போராட்ட காலகட்டத்தின் சிறப்பான ஓர் பகுதியை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதென்ற விடயத்திற்கே ஒதுக்கி இருந்தார். அவ்வாறான ஓர் அரசியல் தலைவர் சிறிலங்கா அரசாங்கத்தின் விமான குண்டு வீச்சினால் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே நடந்த ஒரு யுத்தத்தில் அவர் விழுப்புண் அடைந்ததும் அதனால் ஓர் கைத்தடியுடன் அவர் நடமாடுவதும் உலகமறிந்த விடயமாகும்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும், ஜெனீவா பேச்சுவார்த்தைகளிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையினூடே இனப்பிரச்சினையைத் தீர்க்க முயற்சித்த ஒரு தலைவர். அவ்வாறான ஒரு தலைவரை இலக்கு வைத்து தாக்குவது என்பது பேச்சுவார்த்தையையும், சமாதான முயற்சிகளையும் தாக்குவதற்கு சமமானதாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு கருதுகின்றது.

தமிழ்ச்செல்வனை கொலை செய்ததன் மூலம் இராணுவத் தீர்வில் அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கைகையும், "பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்" என்று கூறுவதெல்லாம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான அரசின் நாடகம் என்பதையும் அவர்கள் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியுள்ளார்கள். அத்தகைய சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த வெறியையும் கோழைத்தனமான செயற்பாடுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கின்றது.

தமது நாட்டின் ஒரு பகுதி குடிமக்களுக்கு எதிராக தெடர்ச்சியான வான் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ஒரு அரசாங்கம் எவ்வளவு தூரம் தமிழ்ப் பொதுமக்களை பாதிக்கும் வகையில் குண்டு வீசி வருகின்றது என்பதற்கு தமிழ்ச்செல்வனின் கொலை ஓர் உதாரணமாக உள்ளது.

தமிழ்ச்செல்வனை கொலை செய்ததன் மூலம், தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கிவிடலாம் என அரசும், சிங்களத் தீவிரவாதிகளும் சிந்தித்தால் அவர்கள் தவறுவிடுகின்றார்கள் என்றே அர்த்தமாகும். அரசாங்கத்திற்கும், யுத்த வெறிகொண்டலையும் "சிங்கள மாக்ஸ்சிஸ்டுகளுக்கும்" கால்மாக்ஸ் சொன்ன ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். "ஒரு சமூகத்தில் ஒடுக்குமுறை என்பது இருக்கும் வரை ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் தொடரவேசெய்யும்." என்பதுதான் அவரது கோட்பாடு. எனவே தமிழ்ச்செல்வனின் கொலை என்பது தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு அரசு போட்ட உரமாகவே தமிழ் மக்கள் எடுத்துக் கொள்வார்கள்.

தமிழ்ச்செல்வனுடைய இழப்பானது தலைவர் பிரபாகரனுக்கும், தமிமீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட இழப்பு மாத்திரமல்ல, முழு தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பாகும். ஆனால் இந்த இழப்பால் தமிழ் சமுதாயம் துவண்டு பின்வாங்கிவிடப் போவதில்லை. தமிழ் மக்களின் இலட்சியக் கனவுகள் நிறைவேறும் வரை இன்னும் வீரியத்துடன் மக்களின் போராட்டம் தொடரும்.

இறுதியாக, சிங்கள அரசாங்கம் இலக்கு வைத்து அழித்தது வெறும் தமிழ்ச்செல்வனை மாத்திரம் அல்ல அது சமாதான முன்னெடுப்புக்களையும் பேச்சுவார்ததைகளையும் இலக்குவைத்து அழித்துள்ளது என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும் என்பதுடன் இதன் விளைவுகளாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அழிவுகளுக்கும் சிறிலங்கா அரசே பொறுப்பேற்கவும் வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் நடந்த பல சுற்று பேச்சுக்களை நாங்கள் நினைவு கூர்வதுடன் தமிழ் மக்களின் விடுதலைக்கு அவர் செலுத்திய உச்சபட்ச தியாக்ததிற்கு நாம் சிரம்தாழ்த்தி எமது வீரவணக்கத்தை செலுத்திக் கொள்கின்றோம். தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ள துயரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாமும் பங்கு பெறுகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.