Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

சிறிலங்காவில் சித்திரவதைகள் அதிகரிப்பு: ஐ.நா. அதிகாரி மன்பிரட் நோவாக் சாடல்
Date&Written by: (30.10.2007- Suganthey)

சிறிலங்காவில் மக்கள் மீதான கொடுமையான சித்திரவதைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான சிறப்புப் பிரதிநிதி மன்பிரட் நோவாக் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் சமூக, மனிதாபிமான மற்றும் கலாச்சாரத்திற்கான மூன்றாம் குழு கூட்டத்தின் போது நோவாக் பேசியதாவது:

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த முதலாம் நாளில் இருந்து 8 ஆம் நாள் வரை நான் சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தேன். அப்போது அதிக எண்ணிக்கையான ஒரே தன்மை உள்ளதும் ஆதாரம் உள்ளதுமான குற்றச்சாட்டுக்களை தடுப்புக்காவலில் உள்ளவர்களிடம் இருந்து நான் பெற்றேன். தகவல்களை பெறும் பொருட்டு காவல்துறையினரால் தாங்கள் மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இராணுவம் தொடர்பாகவும் இதே போன்ற குற்றச்சாட்டுக்களை பெற்றிருந்தேன்.

மிகவும் அதிக அளவிலான முறைப்பாடுகளை சிறிலங்காவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழு நாள் தோறும் பெற்று வருகின்றது. இது சித்திரவதைகள் நாடு முழுவதும் மோசமாகி வருவதனையே காட்டுகின்றது.

சிறிலங்கா அரசினால் 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டத்தில் துன்புறுத்தல்களை மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதில் உள்ள குற்றங்களுக்கான காரணிகளில் பல அதனை ஊக்குவிப்பதாகவே உள்ளன. இதுவரை 3 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றங்களில் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளுக்கு ஆதாரங்கள் கொடுக்கப்பட்ட போதும், அதனால் உருவாக்கப்பட்ட காரணிகள் குற்றவியல் நீதிமன்றங்கள் அதிகமானோரை தண்டிக்கும் வழிவகைகளை உருவாக்கவில்லை என்பது துயரமானது.

துன்புறுத்தல்கள் அதிகளவில் நடைபெறவில்லை என்று அரசு மறுத்து வருகின்ற போதும், என்னால் அவர்களை நம்பவைக்க முடியும் என்பதற்காக் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்று நான் எண்ணுகின்றேன். காலிக்கு அருகில் உள்ள பூசா தடுப்பு முகாமில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் மிகவும் அதிகளவிலான சித்திரவதைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதனை நான் அவதானித்துள்ளேன்.

சட்டத்தினால் துன்புறுத்தல்கள் அண்மையில் தடை செய்யப்பட்ட போதும் உடல் ரீதியான கடுமையான சித்திரவதைகள் கண்டியில் உள்ள போகம்பரை பிரதான சிறைச்சாலையில் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைகளை மேற்கொண்டு இவற்றில் ஈடுபடுவேரை பதவியில் இருந்து நீக்குவதாக அரசு தெரிவத்துள்ளது. ஆனால் அவர்கள் பதவி நீக்கப்படுவதுடன், சட்டத்தின் முன்நிறுத்தப்படவும் வேண்டும் என்பது எனது கருத்து.

தடுப்பு முகாம்களில் அதிக எண்ணிக்கையானோர் தடுத்து வைக்ப்பட்டுள்ளதும் அங்கு நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. அதற்கான பிரதான காரணம் விசாரணைகளுக்கு முன்னர் தடுப்புக்காவலில் உள்ளோர், குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்படடோரை விட அதிகம் என்பது ஆகும்.

8,200 பேர் தடுத்து வைக்கப்பட கூடிய சிறையில் 28,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரச படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்கள் தொடர்புள்ளதாகவே அதிகளவான மனித உரிமை மீறல்கள் உள்ளன. எனினும் நான் இராணுவத்தினரினதும், விடுதலைப் புலிகளினதும் தடுப்பு முகாம்களுக்கு செல்லவில்லை என்பதனால் அது தொடர்பாக கூற முடியாது என்றார் நோவாக்.

பராகுவே, நைஜீரியா, ரோகோ போன்ற நாடுகளுக்கும் கடந்த ஆண்டு நோவாக் பயணங்களை மேற்கொண்டிருந்தார். எதிர்வரும் மாதம் இந்தோனேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அவர் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் குனியா, ஈராக் போன்ற நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொள்ள உள்ளார்.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.