Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

விடுதலைப் புலிகளைப் பாராட்டுவதா?: அமைச்சர்களுக்கு சண்டே ரைம்ஸ் கண்டனம்
Date&Written by: (29.10.2007- Suguna)

அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டும் தொனியில் கருத்துகளை வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர்களுக்கு கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

"- அவர்கள் சாதாரண விடுதலைப் புலி உறுப்பினர்கள் அல்ல

- அவர்கள் மிக நன்கு பயிற்சி பெற்றவர்கள்

- அவர்கள் தரப்பில் மிகவும் வலுவானவர்கள் இழக்கப்பட்டுள்ளனர்.

- எந்த நாடும் பயங்கரவாதத்தை முற்றாக கட்டுப்படுத்தவில்லை. இது தான் உண்மை


- இவை அனைத்தும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெலவினால் கடந்த வாரம் கூறப்பட்ட கருத்துக்கள். கடந்த திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் அனுராதபுரம் வான் படைத்தளத்தை தாக்கிய பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் அவரின் அமைச்சரவை நண்பரான ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா அவருடன் இணைந்து கொண்டார்.

- இத்தாக்குதலை தொடர்ந்து யாரும் விடுதலைப் புலிகளைப் புகழக்கூடாது.

- சிலர் அப்படி நடக்க முயற்சிக்கின்றனர்.

- அது நாட்டைப் பாதிக்கும்.

- அண்மைய மாதங்களாக படையினரின் பதில் தாக்குதல்கள் செயற்திறன் மிக்கவையாக உள்ளன.

- விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டனர்

என்றார் அனுரா பிரியதர்சன யாப்பா.

ரம்புக்வெல இந்த வாரம் மக்களுக்கு புதிய செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது தாக்குதல் நடத்திய "விடுதலைப் புலிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள், வலுவானவர்கள்" என்று கூறியுள்ளார்.

இது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.

எனினும், வேறு யாரும் இதனை தெரிவித்திருந்தால் அவர்களை அரசில் உள்ள பலரும் துரோகிகள் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.

ரம்புக்வெல ஒரு சாதாரண குடிமகன் அல்ல. அரசு சார்பாகவும், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசுபவர். யாப்பா அவரை பின்பற்றவில்லை. "விடுதலைப் புலிகளை பாராட்ட வேண்டாம்" என தெரிவித்திருந்தார். அது கேகலியவுக்கும் பொருந்தும். இங்கு ஒரு வேறுபாடு உண்டு. கேகலியவுக்கு முன்னர் யாப்பா இக்கருத்தை தெரிவித்திருந்தால் அது இருவருக்கும், அரசுக்கும், ஏன் நாட்டுக்குக்கூட உதவியாக இருந்திருக்கும்.

இது பிரித்தானியாவின் பிபிசி சேவையின் உலக சேவையில் திங்கட்கிழமை இரவு ஒளிபரப்பானது. எனவே விடுதலைப் புலிகள் வலுவான பயிற்சி பெற்றவர்கள், மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று அமைச்சர் உலகத்திற்கு கூறியுள்ளார். கேகலிய மிகவும் கேவலமான செயலைப் புரிந்துள்ளார் என்றால் யாப்பாவும் அப்படி தான். ஏனெனில் யாரும் விடுதலைப் புலிகளை பாராட்டக்கூடாது எனவும் அப்படிச் செய்வது நாட்டுக்கு பாதகமானது எனவும் அவர் கூறியதும் இழிவானதே.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய வானூர்திகளின் தீ அணையும் முன்னர் அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். வான் படைத்தளத்தில் என்ன நடக்கின்றது? எப்படி அது நடந்தது என்பது நாட்டு மக்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

எனவே அவர்களால் எவ்வாறு விடுதலைப் புலிகளை பாராட்ட முடியும்?. யாப்பாவின் பேச்சை தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள், வானொலியில் கேட்பவர்கள், பத்திரிகையில் படிப்பவர்களுக்கு விடுதலைப் புலிகளை யாரும் பாராட்டுவதை தடுக்க அவர் முனைவது தெரியவரும். அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்று மக்கள் நினைப்பது இயற்கையானது. அவர்களின் இக்கருத்து விடுதலைப் புலிகள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியதற்கான கருத்துக்களை ஏற்படுத்தி விடும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

மூன்று வானூர்திகளே அழிந்ததாக அவர்கள் இருவரும் ஒருமித்த குரலில் தெரிவித்திருந்தனர். பீச்கிராஃப் அழிக்கப்பட்டதா என்று கேட்கப்பட்ட கேள்வியை நிராகரித்த கேகலிய அப்படி ஒன்று நிகழவில்லை என்று தெரிவித்திருந்தார். அரசின் வாயில் இருந்து உண்மை வர 55 மணிநேரம் எடுத்துள்ளது. 7 வானூர்திகள் அழிந்துள்ளதாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியதாகவும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரட்ணசிறீ விக்ரமநாயக்க தெரிவித்தார்.

ஆனால் கொழும்பில் உள்ள வான்படை உயர் அதிகாரிகள் மற்றும் அனுராதபுரத்தில் இருந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர், அழிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த வான்கலங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்.

இத்தாக்குதலை தொடர்ந்து அரசின் மீது கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சி மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வான் படைத்தளபதி ஆகியோர் பதவி விலகவேண்டும் எனவும் அது கோரியுள்ளது. அரசு இத்தாக்குதலை தடுக்க தன்னை தயார்படுத்தவில்லை என்று அது தெரிவித்துள்ளது.

வான் பாதுகாப்பு முறை முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு முன்னர் தெரிவித்திருந்தது. மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி இத்தாக்குதலை தடுக்கும் தகமை அற்றது. அனால் அதன் கொள்வனவின் மூலம் பெரும் தொகையான பணம் கையூட்டாக பெறப்பட்டு கரிபியனில் உள்ள இரகசிய வங்கிக் கணக்கில் இடப்பட்டுள்ளது.

அரச ஊடகங்களின் துணையுடன் வெற்றிகரமாக போர் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு கூறி வருகின்றது. டிசம்பர் மாதம் போர் முடிவுக்கு வந்துவிடும் என்று அரசு தெரிவித்ததை மக்கள் மறந்திருக்காலம். கடந்த வாரமும் தொலைக்காட்சியில் தோன்றிய மூத்த அரச உறுப்பினர்கள் விடுதலைப் புலிகள் பலவீனமடைந்துள்ளதாகவும் அவர்களில் சிலரே எஞ்சியிருப்பதாகவும் தெரிவத்திருந்தனர்.

ஆனால் உண்மை வேறு. விடுதலைப் புலிகள் அனுராதபுரத்தின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்களது வானூர்திகள் மூன்றாவது முறையும் குண்டுகளை வீசிவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளன. சிறிலங்காவின் வான் பாதுகாப்பு பெயருக்கே உள்ளது. மிக்-27 செயற்திறன் அற்றுள்ளது. படைகளின் பிரதம தளபதியான மகிந்த நாட்டின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

அனுராதபுரம் மீதான தாக்குதல்களின் சேதம் 150 மில்லியன் டொலர்கள் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது கடனாக பெறப்படும் 500 மில்லியன் டொலர்களில் 30 விழுக்காடு.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிக்கைகள் அரசியல் இலாபம் கொண்டவை. கிழக்கை கைப்பற்றியதாக அவர் அறிக்கை வெளியிட்ட சில நாட்களில் விடுதலைப் புலிகள் யால சரணாலயத்தில் தாக்குதலை நடத்தியுள்ளனர். அது அம்பாந்தோட்டையில் அமைந்துள்ளது. இது மகிந்த குடும்பத்தின் சொந்த மாவட்டமாகும். இது ஒரு ஜனநாயக நாடு எனில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மட்டுமல்ல பாதுகாப்பு அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.