Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

காத்தான்குடியில் துணை இராணுவக் குழுவினர் துப்பாக்கிச்சூடு: 3 முஸ்லிம்கள் படுகாயம்
Date&Written by:(13.01.2008- Niyas)
மட்டக்களப்பில் உள்ளூராட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் காத்தான்குடி கர்பாலாவில் உள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக பிள்ளையான் குழுவினர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 முஸ்லிம்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  More...

அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சிறிலங்கா உயர்மட்டத்தினருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவிப்பு
Date&Written by:(13.01.2008- Guruparan)
சிறிலங்காவில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு அரச தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு மிக முக்கியமான தேவைகள் தவிர்த்து ஏனைய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அரச தலைவர், பிரதமர், அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  More...

எதிர்வரும் 5 ஆம் நாளுக்குப் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது?
Date&Written by:(13.01.2008- Guruparan)
அடுத்த மாதம் 5 ஆம் நாள் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவு செய்ய பெருமளவில் இடமுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  More...

அரசியலமைப்புச் சபைக்கு பிரதிநிதிகளை உடன் நியமிக்க வேண்டும்: ரணில் கோரிக்கை
Date&Written by:(13.01.2008- Guruparan)
சிறிலங்காஅரசியலமைப்புச் சபைக்கு பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக எழுந்திருந்த சிக்கல் தற்போது தீர்ந்து விட்டதால் அந்த சபைக்கு உடனடியாக உறுப்பினர்களை நியமிக்குமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அறிவிக்குமாறு கேட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  More...

நிலையியற் குழு உறுப்பினர் நியமனங்களில் தலையிட அதிகாரம் இல்லை: மகிந்த அறிவிப்பு
Date&Written by:(13.01.2008- Guruparan)
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தற்போது செயற்படும் எந்தவொரு நிலையியற் குழுவிற்கும் அரச திணைக்கள தலைவர்களை நியமிக்கவோ அல்லது மாற்றவோ சட்டரீதியான அதிகாரம் இல்லை என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சிறப்பு அமைச்சரவை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  More...

சந்தேகத்தின் பேரில் மலையக இளைஞர் உள்ளிட்ட மூவர் கைது
Date&Written by:(13.01.2008- Guruparan)
ஜா-எலவில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுவெடிப்பு தொடர்பாக பசறையைச் சேர்ந்த மலையக தமிழ் இளைஞர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேநேரம் வேறு இரண்டு மலையகத் தமிழர்கள் பேலியகொடை காவல்துறையினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு "வெளியில் எங்கும் செல்லக்கூடாது" என எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.  More...

சிறிலங்கா நீதிமன்ற உத்தரவை மீறி கொழும்பில் மீண்டும் வீதி சோதனைச் சாவடிகள்
Date&Written by:(13.01.2008- Guruparan)
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மீண்டும் வீதி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை முதல் பயணிகள் சோதனையிடப்பட்டு வருவதுடன் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.  More...

குடாநாட்டில் இருந்து கண்காணிப்புக்குழு இன்றுடன் வெளியேறுகிறது
Date&Written by:(13.01.2008- Geetha)
யாழ். குடாநாட்டில் பணியாற்றிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கடைசி அனைத்துலக கண்காணிப்புப் பிரதிநிதியும் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் வெளியேறுவதுடன் அதன் யாழ். அலுவலகமும் மூடப்படுகின்றது.  More...

தமிழர் சுயநிர்ணய உரிமையையும் இறைமையையும் சர்வதேசம் ஏற்க வேண்டும்- உலகத் தமிழர்கள் கிளந்தெழ வேண்டும்- தொடர்ந்து போராடுவோம்: தமிழீழ தேசியத் தலைவர்
Date&Written by:(27.11.2007- Sankiliyan)
சர்வதேச சமூகம் எமது சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழ வேண்டும் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் அணிவகுத்து நிற்பதால் தொடர்ந்து போராடுவோம் என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் சூளுரைத்துள்ளார்.  More...

வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி
Date&Written by:(27.11.2007- Vimal)
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.  More...

அனைத்துலகம் எதிர்பார்க்கும் மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் சொல்லப்போவது என்ன?
Date&Written by:(27.11.2007- Sankiliyan)
அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களைப் பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது.  More...

வடமத்திய மாகாணத்தில் புலிகள் 4 கிராமவாசிகளை சுட்டுக்கொன்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல்
Date&Written by:(26.11.2007- Vimal)
இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த மாவிலாச்சிய என்ற கிராமப்பகுதியில் இன்று காலை 4 கிராமவாசிகளை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.  More...

மன்னார் பாடசாலையில் விடுதலைப் புலிகள் நடத்தியதாக இராணுவத்தினர் குற்றம்சாட்டும் மோர்டார் தாக்குதலில் 7 பேர் காயம்
Date&Written by:(26.11.2007- Vimal)
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மல்லவராயன் கட்டையடம்பன் பாடசாலை மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் விடுதலைப் புலிகள் மோர்டார் தாக்குதல் நடத்தியதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.  More...

தரையிறங்கிய விளையாட்டு உலங்குவானூர்தியால் கொழும்பில் பரபரப்பு
Date&Written by:(26.11.2007- Nitharsan)
கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டியப் பகுதியில் நேற்றிரவு தன்னியக்க கருவியில் இயங்கும் சிறிய உலங்குவானூர்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  More...

வன்னியில் இன்றும் அகோர வான்குண்டு வீச்சு: சிறுவன் படுகாயம்- 18 வீடுகள் சேதம்
Date&Written by:(26.11.2007- Punitha)
சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னியில் இன்று இரண்டாவது நாளாகவும் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து கடும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.  More...

mLj;j gf;fq;fs;:Previous 2 3 4 5 6 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.