Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மக்களின் வாழ்வுரிமையை மீட்க அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டவர் சு.ப.தமிழ்ச்செல்வன்: கனிமொழி
Date&Written by:(06.11.2007- Ramani)
இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மீட்க அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.  More...

உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு விதைக்கப்பட்டார் நம் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன்
Date&Written by:(05.11.2007- Suganthey)
வரலாறு காணாத அளவு மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்த உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் தூய விதைகுழியில் முழுப்படைய மதிப்புடன் இன்று விதைக்கப்பட்டது.  More...

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிங்கள தேசம் வீழ்த்தியதற்கு பதில் என்ன?: ச.பொட்டு விளக்கம்
Date&Written by:(05.11.2007- Sankiliyan)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிங்கள தேசம் வீழ்த்தியதற்கு தமிழர்களின் பதில் என்ன என்பது குறித்து தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு விளக்கம் அளித்துள்ளார்.  More...

அனைத்துலக ஊடகவியலாளர்- பிரமுகர்களைத் தடுத்தது சிறிலங்கா இராணுவம்
Date&Written by:(05.11.2007- Suguna)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அனைத்துலக ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறிலங்காப் படையினரால் வவுனியாவில் தடுக்கப்பட்டனர்.  More...

கிபீர் வானூர்தி பறப்புக்களுக்கு மத்தியில் பிரிகேடியரின் வித்துடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி வணக்கம்
Date&Written by:(05.11.2007- Punitha)
கிளிநொச்சி வான்பரப்பில் சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் தொடர்ந்தும் பறப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.  More...

ஈழத் தமிழர் அழிந்துபோக இந்தியா எவ்விதத்திலும் இடம் கொடுக்கக்கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
Date&Written by:(05.11.2007- Ramani)
ஈழத் தமிழர் அழிந்துபோக இந்தியா எவ்விதத்திலும் இடம் கொடுக்கக்கூடாது என்று இந்திய ஆளும் மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு வலியுறுத்தியுள்ளது.  More...

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யப்பட்டுள்ளார்: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
Date&Written by:(05.11.2007- Ramani)
ஈழத் தமிழரின் துயரை அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் உலகுக்குத் தெரிவித்து வந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யபட்டுள்ளார் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.  More...

கருணாவிடம் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு?
Date&Written by:(05.11.2007- Sinthu)
பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கருணா கைது செய்யப்பட்ட போது அவர் இராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச்சீட்டை வைத்திருந்தாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.  More...

மணலாற்றில் புதிய களமுனையை திறக்க படையினர் முயற்சி: த நேசன்
Date&Written by:(05.11.2007- Sivamalar)
முல்லைத்தீவில் தமது அடுத்த களமுனையை சிறிலங்காப் படையினர் திறக்கலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.  More...

நிச்சயம் தக்க பதிலடி தருவார் தேசியத் தலைவர்: சீ.புலித்தேவன்
Date&Written by:(04.11.2007- Sankiliyan)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்த சிறிலங்காவுக்கு தக்க பதிலடியை நிச்சயம் எமது தேசியத் தலைவர் தருவார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.  More...

அனைத்துலக சமூகங்களின் புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதி தமிழ்ச்செல்வன்: ஜோன் ஹன்சன் பௌவர்
Date&Written by:(04.11.2007- Suganthey)
அனைத்துலக சமூகங்களின் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்பாடலுக்குரிய முதன்மைப் பிரதிநிதியாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் செயற்பட்டார் என்று இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார்.  More...

குருத்தோலையாக வளர்ந்த மாவீரன் கொல்லப்பட்டமைக்கு கண்ணீர் சிந்தும் உரிமை கலைஞருக்கு இல்லையா?: கி.வீரமணி
Date&Written by:(04.11.2007- Ramani)
தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாயமாக குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே, அவனுடைய தளபதிகளோடு என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்குக்கூட தமிழக முதல்வர் கலைஞருக்கு உரிமை இல்லையா? என்று திராவிடர் கழகத் தலைவர் (தமிழ்நாடு) கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.  More...

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் ஏன்?: ஜெயலலிதாவுக்கு முதல்வர் கலைஞர் பதில்
Date&Written by:(04.11.2007- Ramani)
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்ததால் தமிழ்நாடு அரசாங்கத்தைக் கலைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஜெயலலிதாவுக்கு முதல்வர் கலைஞர் பதில் அளித்துள்ளார்.  More...

ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல, செய‌ல்க‌ளினா‌ல் கொடுப்போம்: ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்
Date&Written by:(04.11.2007- Sankiliyan)
அர‌சிய‌ல் தலைவ‌ர் சு.ப. த‌மி‌ழ்செ‌ல்வ‌னி‌ன் இழ‌ப்‌பி‌ற்கான ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல, செய‌ல்க‌ளினா‌ல் கொடுப்போம் எ‌ன்று ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.  More...

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது: வே.பிரபாகரன்
Date&Written by:(03.11.2007- Sankiliyan)
தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  More...

mLj;j gf;fq;fs;:Previous 12 13 14 15 16 Next

Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.